காலைத் தியானம் – மார்ச் 16, 2021

கொலோ 1: 9 – 14                                                                                         

வேண்டுதல் செய்கிறோம் . .  . ஸ்தோத்திரிக்கிறோம்                                      

பவுல் எவைகளுக்காக வேண்டுதல் செய்கிறார், எவைகளுக்காக தேவனைத் துதிக்கிறார் என்பதைக் கவனியுங்கள்.  கொலோசெ பட்டணத்து விசுவாசிகளுக்குத் தேவையான ஞானம், ஆவிக்குரிய விவேகம், கர்த்தருடைய சித்தத்தை அறிகிற அறிவு, நற்கிரியைகளாகிய கனி, பொறுமை, நீடிய சாந்தம் போன்றவைகளுக்காக அவர் கர்த்தரிடம் இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறார்.  கொலோசெ விசுவாசிகள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே மீட்கப்பட்டு, இருளின் அந்தகாரத்திலிருந்து விடுதலைப் பெற்றதற்காக பிதாவாகிய தேவனைத் துதிக்கிறார். நீ ஜெபிக்கும்போது உன் உலகப் பிரகாரமான தேவைகளுக்கு மாத்திரம்தான் வேண்டுதல் செய்கிறாயோ? உன் பிள்ளைகளுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்காக ஜெபிக்கிறாயா? உன் குடும்பத்தார் இரட்சிக்கப்பட்டுவிட்டார்கள் என்று கர்த்தரைத் துதிக்கிறாயா?                                                     

ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய ராஜ்யத்தையும் உம்முடைய நீதியையும் தேடுவதற்கு வேண்டிய ஞானத்தை எனக்கும் என் குடும்பத்தாருக்கும் தாரும். ஆமென்.