கொலோ 1: 15 – 23
சகலமும் அவரைக் கொண்டும் அவருக்காகவும் சிருஷ்டிக்கப்பட்டது
சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பறவைகள், மிருகங்கள், மரங்கள், ஆகாயவிரிவு, இன்னும் மனிதன் அறிவுக்கு உட்படுத்தப்படாத பலவித படைப்புகள், இவை அனைத்தும் இயேசுவுக்காகவே உண்டாக்கப்பட்டனவாம். அது மாத்திரமல்ல நீயும் நானும் அவருக்காகத்தான் உண்டாக்கப்பட்டிருக்கிறோம். ஆகையால் அவர் விரும்புவதைச் செய்து, அவரை மகிழ்விப்பதே நம்முடைய வேலை. மனிதனின் அந்நியோனிய உறவை அவர் விரும்புகிறார். நாம் அவருடன் நெருங்கிய உறவு வைத்துக் கொள்ளுவதை அவர் ஏக்கத்துடன் எதிர்பார்க்கிறார். நம்முடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து அவரைத் துதிக்கும்போது அவர் மகிழ்ச்சியடைகிறார். உன் ஆண்டவருக்காக உண்டாக்கப்பட்ட நீ யாருக்காக வாழ்கிறாய்?
ஜெபம்
ஆண்டவரே, உம்முடைய விருப்பத்தின்படி, உம்மை மகிழ்விக்கும்படி வாழ எனக்கு பெலன் தாரும். ஆமென்.