காலைத் தியானம் – மார்ச் 18, 2021

கொலோ 1: 24 – 29

கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை என் மாம்சத்திலே நிறைவேற்றுகிறேன்                                   

பவுல் அப்போஸ்தலன் பலவிதமான துன்பங்களையும் பாடுகளையும் அனுபவித்தவர். அவைகளையெல்லாம் கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபைக்காகவே அனுபவிக்கிறேன் என்று பவுல் சொல்லுகிறார். இருந்தாலும் கிறிஸ்து அனுபவித்த உபத்திரவங்களோடு ஒப்பிட்டுப்பார்க்கையில் பவுல் அனுபவித்தது மிகவும் குறைவானது என்கிறார். நம்முடைய வாழ்க்கையோ சொகுசான வாழ்க்கையாக இருக்கிறது. திருச்சபையின் வளர்ச்சிக்காக, மற்றும் பரிசுத்தத்திற்காக நீ எடுத்துக் கொள்ளும் முயற்சி என்ன? நீ விட்டுக் கொடுக்கும் வசதிகள், அனுபவிக்கும் துன்பங்கள் யாவை? உனக்காக நான் மரித்தேனே! எனக்காக நீ என்ன செய்தாய் என்று இயேசு உன்னைப் பார்த்து கேட்கிறார். நீ கிறிஸ்துவுக்காக உன் வசதிகளை விட்டுக் கொடுத்து, துன்பங்களை அனுபவித்தால் அவருடைய மகிமையிலும் உனக்குப் பங்கு உண்டு.                                                    

ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய நற்செய்தியை உலக மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளத்தக்கதாக என் பணம், திறமை, பொருள், நேரம் ஆகியவற்றைக் கொடுக்கிறேன். ஆசீர்வதியும். ஆமென்.