காலைத் தியானம் – மார்ச் 20, 2021

கொலோ 2: 8 – 15

எச்சரிக்கையாயிருங்கள்                                   

கொலோசெ சபைக்குள் புகுந்துவிட்ட கலப்படப் போதனைகளைக் குறித்து எச்சரிக்கிறார் பவுல் அப்போஸ்தலன். தவறானப் போதனைகளைக் கூட அடையாளம் கண்டுகொள்ளலாம். கலப்படப் போதனையை பகுத்தறிவது புது விசுவாசிகளுக்கு எளிதல்ல. கடைசி காலங்களில் கள்ளப் போதகர்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் அதிகரிப்பது நிச்சயம். இன்று பலவிதமான போதகர்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள். ஊழியம் என்ற பெயரில் வியாபாரம் செய்கிறவர்கள் அநேகரைப் பார்க்கிறோம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், கர்த்தரின் பெயரை எடுத்துக் கொண்டு யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் அல்லது செய்யலாம் என்ற நிலை வந்துவிட்டது. நாம் மிகவும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். வேத வசனங்களைப் பிடித்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு போதனையும் இயேசு கிறிஸ்துவையும் அவர் மூலமாக மாத்திரம் கிடைக்கும் இரட்சிப்பையும் முன் நிறுத்தினால், அது சரியான போதனை. கிறிஸ்துவைக் குறித்தும் இரட்சிப்பைக் குறித்தும் வேதத்திற்குப் புறம்பானதைப் பிரதானப்படுத்துவது கள்ளப்போதனை.                                                  

ஜெபம்

ஆண்டவரே, கள்ளப் போதனைகளிலிருந்து என்னை விலக்கிக் காரும். ஆமென்.