காலைத் தியானம் – மார்ச் 21, 2021

கொலோ 2: 16 – 23

தலையைப் பற்றிக் கொள்ளாமல்      

திருச்சபை இயேசு கிறிஸ்துவின் சரீரம். அந்த திருச்சபையாகிய சரீரத்துக்கு கிறிஸ்துதான் தலை. சரீரம் முழுவதையும் தலை ஆதரிக்கிறது. பராமரித்து வழிநடத்துகிறது. தலை இல்லாத சரீரத்தில் உயிர் இருக்க முடியாது. அதே போல இயேசு கிறிஸ்து இல்லாத திருச்சபையிலும் உயிர் இருக்கமுடியாது. இன்று அநேக சபைகள் இயேசு கிறிஸ்துவை ஒதுக்கி வைத்துவிட்டு ஆடலிலும் பாடலிலுமே கவனம் செலுத்துகின்றன. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்ன சொல்லுகிறார் என்பதைக் கேட்க மனதில்லாமல், சபை மக்கள், குறிப்பாக இன்றைய இளைஞர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதிலேயே கவனம் செலுத்துகின்றன. உயிரற்ற சபைகளைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் ஆலய ஆராதனையில் இயேசு கிறிஸ்துவின் சத்தத்தைக் கேட்கமுடியாவிட்டால் அந்த ஆராதனை வெறும் சடங்காச்சாரமே.                                                  

ஜெபம்

ஆண்டவரே, நீரே என் குடும்பத்திற்கும் தலைவன்.  தலைமைப் பொறுப்பு உம்முடையதே. என் குடும்பத்தினர் ஒருவரும் உம்மை விட்டு விலகிவிடாதபடி எங்களைக் காத்துக் கொள்ளும். ஆமென்.