காலைத் தியானம் – மார்ச் 22, 2021

கொலோ 3: 1 – 8

நீங்களும் அவரோடேகூட மகிமையில் வெளிப்படுவீர்கள்      

ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறவேண்டுமானால் குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகளாவது அதற்காக பயிற்சி செய்யவேண்டுமாம். பதக்கம் வெல்ல வேண்டுமானால் அதற்கான கடின உழைப்பை மேற்கொண்டுதான் ஆகவேண்டும். பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டுமென்றால், அதற்கு வேண்டிய உழைப்பு மிகவும் அவசியம். அதே போல கிறிஸ்துவின் மகிமையில் நமக்குப் பங்கு வேண்டுமென்றால், மேலானவைகளை (அதாவது பரலோக ராஜியத்தின் காரியங்களை) மாத்திரம் நாம் தேட வேண்டும். விபசாரம், அசுத்தம், மோகம், விக்கிரக ஆராதனை, பொருளாசை, கோபம், மூர்க்கம், பொறாமை, வம்பு வார்த்தை போன்றவைகளுக்கு நம்மிடம் இடமேயிருக்க முடியாது. உன் மனம் எவற்றை நாடுகிறது?                                                

ஜெபம்

ஆண்டவரே, நான் எப்போதும் மேலானவைகளையே நாடும்படி என் உள்ளத்தைப் பரிசுத்தமாகக் காத்துக் கொள்ளும். ஆமென்.