கொலோ 3: 9 – 15
புதிதாக்கப்பட்ட புதிய மனிதன்
இன்று திருச்சபையின் அங்கத்தினராக இருக்கும் அநேகருக்கு உண்மையான இரட்சிப்பின் அனுபவம் கிடையாது. ஆண்டவரே என் பாவங்களையெல்லாம் மன்னியும் என்று ஜெபித்துவிட்டால், அந்த ஜெபம் அவர்களுக்குப் பரலோகம் செல்லும் உரிமையை வழங்கி விட்டது என்று நினைத்துக் கொள்ளுகிறார்கள். ஆனால் மறுபடியும் பாவ வாழ்க்கைக்குத் திரும்பிவிடுகிறார்கள். நாம் உண்மையான மனஸ்தாபத்தோடே மனந்திரும்பாமல் அறிக்கையிடும் பாவங்கள் மறுபடியும் வந்து நம்மைப் பற்றிக் கொள்ளும். பாவ குணத்திலிருந்து விடுபட்டு, புதிய மனிதனாகவேண்டும் என்ற ஆசை நமக்கு இருக்கவேண்டும். அப்பொழுது நம் ஜெபத்தின்படி, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நம் பாவங்கள் கழுவப்பட்டு, நம் பாவ குணம் மாற்றப்பட்டு, நாம் நீதிமான்களாகி விடுகிறோம். புதிய மனிதராகிவிடுகிறோம். இந்த அனுபவம் உனக்கு இல்லையென்றால் இன்றே மனந்திரும்பு. புதிதாக்கப்பட்ட மனிதரே பரலோக வாழ்க்கைக்குத் தகுதியானவர்கள்.
ஜெபம்
ஆண்டவரே, நான் உம்மால் கழுவப்பட்டவன்(ள்). அசுத்தம் நிறைந்த இவ்வுலகில் வாழ்கிற என்மீது, பாவம் என்னும் தூசி வந்து ஒட்டிக் கொள்ளாமல் என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.