காலைத் தியானம் – மார்ச் 24, 2021

கொலோ 3: 16 – 25

எதைச் செய்தாலும் . . . கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்              

மனிதனை மகிழ்விப்பதற்கென்று எதையும் செய்யவேண்டாம் என்பது பவுல் அப்போதலனின் அறிவுரை. நீ செய்யும் வேலை கூட உன் ஆண்டவர் உனக்குக் கொடுத்திருக்கும் ஈவு. உன் வேலையை உன் ஆண்டவருக்குச் செய்யும் சேவை என்ற உணர்வோடு செய்தால், அதில் சிறப்பும் பரிபூரணமும் வெளிப்படும். அது உன் ஆண்டவருக்குப் பிரியமானதாக இருக்கும். அந்த விதமாக நீ செய்யும் வேலை உன் மேல் அதிகாரிகளுக்கும் பிரியமானதாகவே இருக்கும். அப்படியில்லாமல் நீ மனிதரை மகிழ்விப்பதற்காக செயல்பட்டால், உன் செயல்களெல்லாம் பிரதிபலன் எதிர்பார்த்து செய்தவைகளாகவேயிருக்கும். கர்த்தருக்காகச் செய்யும் செயல்கள் அனைத்தும் அன்பில் வேரூன்றியிருக்கும். அவைகளில் பொய், ஏமாற்றுதல், திருடு, வன்முறை போன்றவைகளுக்கு இடமிருக்காது.                                               

ஜெபம்

ஆண்டவரே, என் செயல்கள் அனைத்தும் உம்மை மகிழ்விப்பதாக இருக்கட்டும். ஆமென்.