காலைத் தியானம் – மார்ச் 25, 2021

கொலோ 4: 1 – 7

ஸ்தோத்திரத்துடன் ஜெபம்              

பவுல் துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் கர்த்தரை நன்றாக அறிந்தவர். ஆகையால் தோத்திரப் பாடல்களைப் பாடுவதைப் பற்றி அவர் அடிக்கடி வலியுறுத்துகிறார். நடு இரவில், கால்கள் தொழுமரத்தில் மாட்டப்பட்டு சிறையில் சரீர வேதனையுடன் இருந்த சமயத்திலும்கூட பவுல் துதிப் பாடல்கள் பாடியவர். துதிப் பாடல்கள் பாடுவதின் மகிழ்ச்சியை அனுபவித்தவர். அதிசயங்களையும் அற்புதங்களையும் கண்டவர். இன்றைய நாட்களில் அநேகத் துதிப் பாடல்கள் இணையதளத்தில் எளிதாகக் கிடைக்கின்றன. துதிப்பாடல்களை மனப்பாடம் செய்துகொண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் உன் ஆண்டவரைத் துதித்துக் கொண்டேயிரு.                                              

ஜெபம்

ஆண்டவரே, எல்லா சூழ்நிலைகளிலும் உம்மைத் துதிக்கும் மனநிலையை எனக்குத் தாரும். ஆமென்.