காலைத் தியானம் – மார்ச் 27, 2021

1 தெச 1: 1 – 10

யாவருக்கும் மாதிரிகளானீர்கள்                   

மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகளுக்கு தெசலோனிக்கேயர் சபையின் விசுவாசிகள் முன்மாதிரிகளாயிருந்தார்கள் என்று மெச்சப்படுகிறார்கள். மனிதரில் யாரும் பரிபூரண வாழ்க்கை வாழ்ந்தவர்கள் இல்லை. இயேசு கிறிஸ்துவே நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் குற்றமற்ற, பரிபூரண  முன்மாதிரி. இருந்தாலும் இயேசுவை இப்பூலோக வாழ்க்கையில் நாம் முகமுகமாய் அனுதினமும் பார்ப்பதில்லை. ஆகையால் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒருவரையொருவர் ஊக்குவித்து உற்சாகப்படுத்த, மனிதருக்குள்ளும் முன்மாதிரிகள் தேவை. நீயும் முன்மாதிரியாக இருப்பதற்கு அழைக்கப்பட்டிருக்கிறாய். உன் வாழ்க்கையில் மற்றவர்கள் இயேசுவைக் காணமுடிகிறதா? உன் பிள்ளைகள், உன் வீட்டருகில் வசிக்கும் மற்றவர்கள், உன்னோடு வேலை செய்கிறவர்கள் ஆகியோருக்கு நீ முன்மாதிரியாக இருக்கிறாயா?                                              

ஜெபம்

ஆண்டவரே, மற்றவர்கள் என்னில் உம்மைக் காண கிருபை தாரும். ஆமென்.