காலைத் தியானம் – மார்ச் 28, 2021

மாற்கு 11: 1 – 11

இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்                   

இன்று குருத்தோலை ஞாயிறு.  கழுதைக் குட்டியின் சொந்தக்காரனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள் என்று இயேசு சொல்லவில்லை. யாராவது கேட்டால் இது ஆண்டவருக்கு வேண்டும் என்று சொல்லுங்கள் என்கிறார். இதிலிருந்து நாம் இரண்டு முக்கியமான பாடங்களைப் படிக்கலாம். முதலாவதாக, ஆண்டவருக்கு முன்பாக என்னுடையது என்று சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை. நான் நேசிக்கும் உறவுகள் கூட அவர் கொடுத்துள்ள பிச்சைதான். நான் சம்பாதித்துவிட்டேன் என்று நாம் நினைக்கும் பணமும், சொத்துக்களும்கூட அவருடையவைகள்தான்.  ஆண்டவருடைய விருப்பப்படி சில காலம் உபயோகிக்கவும் பராமரிக்கவும் நம்மிடம் கொடுக்கப் பட்டிருப்பவை தான் அப்பணமும் சொத்துக்களும். இரண்டாவதாக, ஆண்டவர் தமக்கு வேண்டுமென்று கேட்டுவிட்டால் யாரும் அதைத் தடுக்க முடியாது.                                              

ஜெபம்

ஆண்டவரே, எனக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள உம்மைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதை நினைவுபடுத்தியதற்காக நன்றி சுவாமி.  ஆமென்.