காலைத் தியானம் – மார்ச் 29, 2021

மாற்கு 11: 22 – 33

நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்                   

கேள்விக்குப் பதில் இன்னொரு கேள்வி! இயேசு இந்த விதமாக, கேள்விக்குப் பதிலை நேரடியாகச் சொல்லாமல், வேறொரு கேள்வியைக் கேட்பதை ஆங்காங்கே பார்க்கிறோம். இதைப் பல கோணங்களிலிருந்து பார்க்காலாம். முதலாவதாக, இயேசுவிடம் கேள்வி கேட்டவர்களின் நோக்கம் பதில் தெரிந்து கொள்வதற்காக அல்ல. இயேசுவை எப்படி தங்கள் வலையில் சிக்க வைக்கலாம் என்பதே அவர்கள் நோக்கமாயிருந்தது. இரண்டாவதாக, கேள்வி கேட்பவர்களுக்கே பதிலும் தெரியும் என்று இயேசுவுக்குத் தெரிந்திருக்கவேண்டும். மூன்றாவதாக, எதிர் கேள்வி கேட்பதின் மூலம், கேள்வி கேட்பவர்களின் மனக் கண்களைத் திறக்க இயேசு உதவலாம். உன் கேள்விகளுக்கு நேரடியான பதில் கிடைக்கவில்லையென்றால், இயேசு கிறிஸ்து உன்னிடம் என்ன சொல்லுகிறார் என்பதைக் கவனி.                                            

ஜெபம்

ஆண்டவரே, விசாலமாகப் பார்க்கும்படி என் மனக்கண்களைத் திறந்தருளும். ஆமென்.