மாற்கு 13: 1 – 13
இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது பாரும்
சீடர்கள் ஆலயக் கட்டிடத்தின் பிரமாண்டமான தோற்றத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். இயேசுவோ, நடக்கவிருக்கும் சம்பவங்களைக் குறித்து தீர்க்கதரிசனமாய்ப் பேசினார். அந்த தேவாலயக் கட்டிடம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது (எஸ்றா 6: 14, 15). ஏரோது ராஜா, ஆலயக் கட்டிடத்தை மேலும் அழகுபடுத்தி எருசலேமின் கட்டிடங்களுக்குள் மிகவும் அழகு வாய்ந்த ஒன்றாக அதை மாற்றினான். ஆனால் இது தேவனை மகிமைப் படுத்துவதற்காக செய்யப்படவில்லை. யூதர்களை மகிழ்விக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு செய்யப்பட்டது. கிபி 70ஆம் ஆண்டில், இயேசு கிறிஸ்துவின் வாக்குப்படி ரோமர்களால் அந்த தேவாலயம் தரைமட்டமாக்கப்பட்டது. உன் ஆண்டவருக்கு கட்டிடங்கள் முக்கியமல்ல. ஆத்துமாக்கள் தான் முக்கியம்.
ஜெபம்
ஆண்டவரே, மனிதரின் இரட்சிப்புக்காக நான் உழைக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.