காலைத் தியானம் – மார்ச் 31, 2021

மாற்கு 14: 1 – 11    

அவர்கள் அதைக் கேட்டு சந்தோஷப்பட்டு                    

ஒரு கட்சியை விட்டு இன்னொரு கட்சிக்குத் தாவுவது இன்றைய அரசியலில் நாம் அடிக்கடி பார்ப்பதுதான். யூதாஸ் காரியோத்தும் அதைத்தான் செய்தான். இயேசுவின் கட்சியில் மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தான். இவர்தான் ரோமர்களை வீழ்த்திவிட்டு யூதர்களை வல்லமையாய் அரசாளப் போகும் ராஜா என்று கனவு கண்டுகொண்டிருந்தான். மேலும் பணத்தைக் குறித்து யூதாஸ் வைத்திருந்த மனக்கோட்டைக்கும் இயேசு போதித்த போதனைக்கும் சம்பந்தமேயில்லை. நல்ல வலுவான கட்சியாகத் தோன்றிய பிரதான ஆசாரியரின் கட்சிக்கு யூதாஸ் தாவிவிட்டான். அதற்காக அவனுக்குப் பணமும் கிடைத்தது. யூதாஸ் காரியோத்து எடுத்த முடிவு தற்காலிக மகிழ்ச்சியை அவனுக்கும், பிரதான ஆசாரியருக்கும், சாத்தானுக்கும் கொடுத்தது. உன்னுடைய ஒவ்வொரு செய்கையும் யாருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்பதை ஆராய்ந்து பார்.                                                               

ஜெபம்

ஆண்டவரே, உமக்குப் பிரியமில்லாத எந்த ஒரு காரியத்தையும் செய்துவிடாமல் என்னைக் காத்துக்கொள்ளும். ஆமென்.