காலைத் தியானம் – ஏப்ரல் 04, 2021

மாற்கு 16: 1 – 20  

உலகமெங்கும் போய் . . .  சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்

இயேசு ஆரம்பித்த ஊழியத்தை சீஷர்கள் தொடர்ந்து செய்தார்கள். நாமும் தொடர்ந்து துன்பப்படுவோருக்கு நன்மை செய்து, நற்செய்தியை உலகமெங்கும் அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். நற்செய்தியை அறிவிப்பது என்றால், ஏதோ மேடையில் ஏறி பிரசங்கம் செய்ய வேண்டும் என்று அர்த்தமோ? இல்லை. இந்த பூலோக வாழ்க்கைக்குப் பிறகு ஒரு பரலோக வாழ்க்கை உண்டு என்பது செய்தி. நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நாம் கழுவப்பட்டுவிட்டால் நாமும் பரிசுத்தராக அந்த பரலோக வாழ்க்கைக்குள் கடந்து செல்லலாம் என்பது நற்செய்தி. பாவங்களை மன்னித்து நம்மைப் பரிசுத்தமாக்கும்படி இயேசு கிறிஸ்து ஏற்கனவே பலியாக மரித்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்பது எல்லா மக்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கும் நற்செய்தி.  இதை நாம் சந்திக்கும் எல்லாருக்கும் தெரியப்படுத்துவதுதான் நம்முடைய வேலை. எதிர்ப்புகள் வரலாம். ஆனால் ஆண்டவருடைய திட்டத்தை யாரும் நிறுத்த முடியாது.                                                        

ஜெபம்

ஆண்டவரே, நீர் என்னை வைத்திருக்கும் இடத்தில் நற்செய்தியைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள எனக்குத் தேவையான மன உறுதியையும் ஞானத்தையும் தாரும். ஆமென்.