காலைத் தியானம் – ஏப்ரல் 06, 2021

1 தெச 2: 11 – 20     

மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள்

தெசலோனிக்கேயர் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் என்று நம்பிக்கையுடன் பவுல் கூறுகிறார். நாம் அனுதினமும் ஒரு அலுவலகத்தில் வேலை செய்தால், அந்த வேலைக்குரிய சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் பெறுகிறோம் அல்லவா? கடினமாகவும் உண்மையுடனும் உழைப்பவர்களுக்கு பதவியில் உயர்வும் வருமானத்தில் உயர்வும் கிடைக்கின்றன. அதுதான் வேலை செய்யுமிடத்தில் நமக்குக் கிடைக்கும் கிரீடம். இப்படிப்பட்ட கிரீடங்களைப் பெறுவது நாம் உருவாக்கப்பட்டதின் நோக்கம் அல்ல. கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து அவருடைய நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவித்து, முன்மாதிரியான வாழ்க்கை வாழும்படி நாம் உருவாக்கப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட வாழ்க்கையே நமக்கு இயேசு கொடுக்கும் கிரீடத்தைப் பெற்றுத் தரும். எல்லாரும் கிரீடம் அணிந்தவர்களாகக் காணப்படும்போது நீ எப்படி இருப்பாய்? உனக்கும் கிரீடம் உண்டா? உன் பிள்ளைகளை ஆண்டவருடை பிள்ளைகளாக, தேவனை அறிகிற அறிவிலே வளர்த்துவிட்டால் அவர்களே உனக்குக் கிரீடமாயிருப்பார்கள். உன் குடும்பம் தான் உனக்குக் கொடுக்கப்பட்ட பணித்தளமோ?                                                       

ஜெபம்

ஆண்டவரே, என் பிள்ளைகளை உம்முடையவர்களாக வளர்த்து எடுக்கவேண்டிய ஞானத்தையும் பொறுமையையும் எனக்குத் தாரும். ஆமென்.