1 தெச 3: 1 – 13
ஆறுதலடைந்தோம்
பவுல் தன் சபையாரைத் தன் பிள்ளைகளைப் போல கண்காணிக்கிறார். ஆகவே பிள்ளைகள் மேல் பெற்றோருக்கு இருக்கும் பதற்றம் கலந்த எதிர்பார்ப்பு பவுலிடமும் இருந்தது. அவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன் ஆறுதலடைகிறார். நீ உன் பெற்றோர் பெறுமைப்படும்படியான காரியத்தையே எப்போதும் செய்து வருகிறாயா? எங்கள் குடும்பத்தில் நான்கு தலைமுறைகளாக பெற்றோர் பிள்ளைகளுக்கு, குறிப்பாக அவர்கள் பெற்றோரின் அரவணைப்பிலிருந்தும் பாதுகாப்பிலிருந்தும் வெளியே போகும்போது, சொல்லிக்கொடுக்கும் வசனங்களில் ஒன்று, 3 யோவான் 4. என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.
ஜெபம்
ஆண்டவரே, நான் எப்பொழுதும் உமக்கும் என் பெற்றோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய பிள்ளையாக சத்தியத்திலே நடக்க உதவிசெய்யும். ஆமென்.