காலைத் தியானம் – ஏப்ரல் 09, 2021

1 தெச 4: 9 – 18          

கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்

தெசலோனிக்காவிலுள்ள முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, தாங்கள் பூமியில் வாழும் நாட்களிலேயே நடந்துவிடும் என்று எதிர்பார்த்தார்கள். அப்படிப்பட்ட நேரத்தில், தங்களுக்கு அருமையானவர்கள் மரித்தபோது அவர்களுக்கு ஏற்பட்டதெல்லாம் வருத்தம், குழப்பம் மற்றும் ஏமாற்றம் தான். ஆகவே பவுல், அவர்களுக்கு சில உண்மைகளை விளக்குகிறார். கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். இயேசு கிறிஸ்து தம்முடைய பிள்ளைகளை அழைத்துக்கொண்டு போகும்படி மறுபடியும் வரும்போது (இரண்டம் வருகையின் போது) கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எதையும் இழக்க மாட்டார்கள்; அவர்கள்தான் அந்நேரத்தில் பூமியில் வாழும் பரிசுத்தவான்களுக்கு முன் செல்வார்கள் என்று பவுல் சொல்லுகிறார். அவர்கள் கிறிஸ்துவின் மகிமையில் பங்குபெறுவார்கள். கிறிஸ்துவுக்கென்று வாழ்கிறவர்கள் மாத்திரமே கிறிஸ்துவுக்குள் மரிக்க முடியும். 

ஜெபம்

ஆண்டவரே, உமது இரண்டாம் வருகையின் போது, உம்முடைய மகிமையிலே உம்மோடு பங்குபெறும் பாக்கியத்தை எனக்குத் தாரும். ஆமென்.