காலைத் தியானம் – ஏப்ரல் 10, 2021

1 தெச 5: 1 – 11         

விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக் கடவோம்  

எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறவன், கிறிஸ்துவின் வருகை எப்போது இருக்குமோ என்று கலங்க வேண்டியதில்லை. நமக்கு இந்த பூமியில் கொடுக்கப்பட்டிருக்கும் நாட்கள் அதிகமில்லை. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை எந்த நேரத்திலும் நிகழலாம். அல்லது நாம் மரணத்தின் மூலமாக இப்பூமியை விட்டுச் செல்லும் நேரம் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். உன் வேலைகளில் எதையும் பாக்கி வைக்காதே. நீ இன்று செய்யவேண்டியதை, நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளி வைக்காதே. பிறருக்கு செய்யவேண்டிய கடமைகளைத் தள்ளிப் போடாதே. யாருடனாவது ஒப்புறவாக வேண்டியதிருந்தால் அதை உடனே செய் (மாற்கு 13: 33). 

ஜெபம்

ஆண்டவரே, உம் வருகைக்கு ஆயத்தமாக நான் இருக்கிறேன். இந்த தயார் நிலையை விட்டு விழுந்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.