1 தெச 5: 12 – 28
எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்
கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படுகிறவன் செய்யவேண்டிய காரியங்களில் பலவற்றை பவுல் இங்கு சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு வசனத்தையும் வைத்து உன்னைச் சோதித்துப் பார். எல்லாருடனும் சமாதானமாயிருக்கிறேனா? திடனற்றவர்களைத் தேற்றுகிறேனா? பலவீனரைத் தாங்குகிறேனா? திடனற்றவர்களுக்கும் பலவீனர்களுக்கும் இயேசுவின் இருதயத்தில் ஒரு சிறப்பு இடம் உண்டு. நானும் அவர்களை நேசிக்கிறேனா? நீடிய சாந்தம் என்னில் காணப்படுகிறதா? இடைவிடாமல் ஜெபம் பண்ணுகிறேனா? அடிக்கடி இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்டு உன் வாழ்க்கையின் பாதையைச் சரி செய்துகொள்.
ஜெபம்
ஆண்டவரே, பவுல் அப்போஸ்தலனின் கடிதங்களுக்காக உமக்கு நன்றி சுவாமி. அவர் மூலமாக நீர் கொடுத்திருக்கும் போதனைகளுக்காகவும் நன்றி. நலமானவைகள் அனைத்தையும் பிடித்துக் கொள்ள பெலன் தாரும். ஆமென்.