காலைத் தியானம் – ஏப்ரல் 12, 2021

ஆமோஸ் 1: 1 – 5            

மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ் . . .  தரிசனங்கண்டு சொன்ன வார்த்தைகள்  

ஆமோஸ் தெற்கு நாடாகிய யூதாவில் வசித்தவன். வடக்கிலிருந்த இஸ்ரவேலரைக் குறித்து (பத்து கோத்திரத்தாரைக் குறித்து) கர்த்தர் சொன்ன கடுமையான வார்த்தைகளை அந்நியனாக இருந்த போதிலும், தைரியமாக பேசும்படி கிளம்பிவிட்டான்.  இந்த தீர்க்கதரிசனம் கிட்டத்தட்ட கி.மு. 760 ஆண்டில் எழுதப்பட்டது. ஆமோஸ் ஒரு மேய்ப்பன். தேவாலயத்தில் வேலை செய்தவன் அல்ல. அந்த காலத்தில், ஆடு மாடுகளை மேய்ப்பது, மீன் பிடிப்பது, விவசாயம் செய்வது போன்றவைகள் தான் முக்கியமான தொழில்கள். ஒருவேளை ஆமோஸ் இன்று பூமியில் வசித்துக் கொண்டிருந்தால், ஒரு கம்பெனியில் அல்லது ஒரு வங்கியில் வேலை செய்துகொண்டிருப்பான். போதகர்களும் சுவிசேஷர்களும்தான் “கர்த்தருடைய மனிதர்” என்ற பெயருக்குப் பாத்த்திரர் என்று நாம் நினைக்கக் கூடாது. நீ என்ன வேலை அல்லது தொழில் செய்துகொண்டிருந்தாலும் நீயும் கர்த்தருடைய மனிதனாக/ மனுஷியாக வாழமுடியும்.

ஜெபம்

ஆண்டவரே, ஆமோஸைப் போல என்னையும் உபயோகியும். ஆமென்.