காலைத் தியானம் – ஏப்ரல் 13, 2021

ஆமோஸ் 1: 6 – 15            

மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும்  

இங்கு மூன்று, நாலு என்று மறுபடியும் மறுபடியும் வரும் சொற்கள் மக்கள் தொடர்ந்து செய்துவந்த பாவத்தைக் குறிக்கின்றது. மூன்றுவிதமான பாவங்களோ அல்லது ஏழு விதமான பாவங்களோ என்று சொல்லப்படவில்லை. உதாரணமாக, தீருவில் வசித்தவர்களைக் குறித்து அவர்கள் சகோதரருடைய உடன்படிக்கையை நினையாமல், சிறைப்பட்டவர்கள் எல்லாரையும் ஏதோமியர் கையில் ஒப்படைத்தார்கள் என்னும் ஒரு குற்றம் மாத்திரமே சொல்லப்பட்டிருக்கிறது. இப்படியாக ஒவ்வொரு நாட்டு மக்களையும் குறித்து ஒவ்வொரு பாவம் தான் சொல்லப்பட்டிருக்கிறது. நாமும் ஒரு பாவம் தானே என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. ஒரு பாவத்தைத் திரும்பத் திரும்ப செய்தால் அதுவே நம் வாழ்க்கை முறையாக மாறிவிடும். ஆண்டவருடைய கோபத்துக்கு ஆளாகிவிடாதே.

ஜெபம்

ஆண்டவரே, என்னுடைய சுயமுயற்சியால் கைவிட முடியாத பாவத்தை விட்டு வெளியே வர, உம்முடைய கிருபை எனக்குத் தேவை. தயவாய் எனக்கு இரங்கும். ஆமென்.