ஆமோஸ் 2: 16 – 11
சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள்
ஒவ்வொரு ஜாதி அல்லது தேசத்து மக்கள்மீதும் ஒவ்வொரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. இஸ்ரவேலர் மீதோ பல குற்றச்சாட்டுகள். அவர்கள் ஏழைகளை அடிமைகளாக விற்றார்கள். சிறுமையானவர்களின் வழியைப் புரட்டினாகள். (They exploited the poor.) தகாத உடலுறவு கொண்டார்கள். அந்நிய தேவர்களை வணங்கினார்கள். இது இஸ்ரவேலரைப் பற்றிய கதை என்று மாத்திரம் நினைக்காமல், நம்மிடத்தில் உள்ள குறைகளை நினைத்துப் பார்ப்போம். நாம் அறியாமல் செய்துவரும் குற்றங்கள் ஏதாவது உண்டா? ஏழைகளை மதிக்கிறாயா? உன் பணத்தை வைத்து எதையாவது சாத்தித்துவிடலாம் என்று நினைத்தால், அது பணமில்லாத ஏழைகளுக்கு விரோதமான செயலாக இருக்கலாம். கர்த்தரை அறிந்தவர்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெபம்
ஆண்டவரே, நான் இதுவரை அறியாமல் செய்துவந்துள்ள குற்றங்களை மன்னியும். ஆமென்.