ஆமோஸ் 2: 12 – 16
பலசாலிகளுக்குள்ளே தைரியவான் . . . ஓடிப்போவான்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சினிமாவிலும் வரும் கதாநாயகன் பலசாலி. எத்தனை பேர் வந்தாலும் அவர்களையெல்லாம் அடித்து விரட்டி விடுவான். அவனுக்கு பயம் என்ற சொல்லுக்கே அர்த்தம் தெரியாது. அப்படிப்பட்ட தைரியசாலி! இப்படிதான் வாழவேண்டும் என்று நம்மில் பலர் நினைத்துக் கொள்ளுகிறோம். ஆண்டவருக்குமுன் நம்முடைய உடல் பலமும், மன தைரியமும் காற்றில் பறந்துவிடும் பஞ்சைப் போன்றது. “அந்நாளிலே” – அதாவது நாம் நியாயத்தீர்ப்பை எதிர்கொள்ளும் அந்நாளிலே, நம்முடைய உடல்பலமும் மன தைரியமும் நம்மைக் காப்பாற்றாது.
ஜெபம்
ஆண்டவரே, உம்முடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வாழும் கிருபையை என்றென்றைக்கும் எனக்குத் தாரும். ஆமென்.