ஆமோஸ் 5: 7 – 14
நீங்கள் தரித்திரனை மிதித்து . . . பொளிந்த கற்களால் வீடுகளைக் கட்டினீர்கள்
உன்னுடைய சொத்து, பணம், உயர்வு – இவைகளில் எவையாவது ஏழைகளை ஒடுக்கி அல்லது ஒதுக்கி பெற்றவைகளா? நாம் இதில் அதிகக் கவனமாயிருக்கவேண்டும். அது மாத்திரமல்ல, வேதம் முழுவதும், ஏழைகளுக்கு நாம் உதவி செய்யவேண்டும் என்பதை மறுபடியும் மறுபடியும் ஆண்டவர் சொல்லுகிறார். ஏழைகளுக்கு உதவி செய்கிறவன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்கிறான். உதவி செய்ய மனதில்லாதவனோ, பலவித சாக்கு போக்குகளைச் சொல்லுகிறான். அவைகளில் சில: ஏழைகளின் நிலைக்கு அவர்களே காரணம், நான் ஏன் உதவி செய்ய வேண்டும்? என்னுடைய தேவைகளுக்கே என்னுடைய பணம் போதாது; நான் கொடுக்கும் பணம் வீணாக்கப்படும்; என் பணம் ஏழைகளைச் சென்றடையாது; நான் செய்யும் சிறிய உதவியினால் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை – போன்றவை. எந்த சாக்குப் போக்கும் சொல்லாமல் உதவி செய்.
ஜெபம்
ஆண்டவரே, ஏழைகளுக்கு இரங்கும் இருதயத்தை எனக்குத் தாரும். ஆமென்.