காலைத் தியானம் – ஏப்ரல் 23, 2021

ஆமோஸ் 5: 15 – 27               

கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ         

கர்த்தருடைய நாள், அவர் நம்மை நியாயந்தீர்க்கும் நாள். ஆண்டவருக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ்கிறவர்களுக்கு, அது ஒரு பொன்னாள். ஜீவ கிரீடத்தைப் பெறும் நாள். இயேசு கிறிஸ்துவைச் சேவிப்பதால், இப்பூமியில் துன்பம் அனுபவித்து வருகிறவர்களுக்கு அது இளைப்பாறுதல் கொடுக்கும் நாள். ஆனால், பாவ வாழ்க்கையில் தொடர்ந்து வாழ்ந்துகொண்டு, அதற்குரிய பலனை அல்லது தண்டனையை இங்கேயே அனுபவித்து வருகிறவர்களுக்கு, கர்த்தருடைய நாள் இன்னும் பயங்கரமான வேதனைகளைக் கொண்டுவரும். அது சிங்கத்தின் வாயிலிருந்து தப்பி, கரடியின் பிடிக்குள் சிக்குவதைப் போலிருக்கும். ஒரே வழி, கர்த்தரிடத்தில் திரும்புவதுதான்.

ஜெபம்

ஆண்டவரே, நிலையில்லா இன்பத்தில் ஆசைகொள்ளாமல், உம்மை சேவிப்பதையே தெரிந்துகொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்.