காலைத் தியானம் – ஏப்ரல் 24, 2021

ஆமோஸ் 6: 1 – 7               

தந்தக் கட்டில்களில் படுத்துக்கொண்டு               

தந்தம் இன்று போல் அந்தக் காலத்திலும் அதிக விலையுள்ள ஒரு பொருள். ஒரு சிறிய துண்டுக்கே எக்கச்சக்க விலையென்றால், தந்தத்தால் செய்யப்பட்ட கட்டில்களின் மதிப்பு எவ்வளவாயிருந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். செல்வம் வைத்திருப்பது தவறா என்ற கேள்விக்கு விடையை இன்று தியானிப்போம். வசதியுள்ள வாழ்வை ஆண்டவர் வெறுக்கவில்லை. ஆடம்பரத்தை அவர் வெறுக்கிறார். ஆடம்பரம் சுய விளம்பரத்தை நாடும். நிர்விசாரத்தை அல்லது அலட்சியத்தை உருவாக்கும். பெருமையைக் கொடுக்கும். உனக்கும் உன்னைச் சுற்றியிருக்கும் ஏழைகளுக்குமிடையே, அவர்கள் இருப்பதே தெரியாத அளவுக்கு அல்லது அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணமே வராத அளவுக்கு  இடைவெளி உண்டாகிவிட்டால், நீ ஆடம்பரத்தில் வாழ்கிறாய் என்று அர்த்தம்.

ஜெபம்

ஆண்டவரே, ஆடம்பரத்தில் நான் சிக்கிக் கொள்ளாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.