காலைத் தியானம் – ஏப்ரல் 25, 2021

ஆமோஸ் 6: 8 – 14               

நியாயத்தை நஞ்சாகவும் நீதியின் கனியை எட்டியாகவும் மாற்றினீர்கள்               

ஒரு தேசத்தின் செழிப்பு அநேக சமயங்களில் அழிவுக்கு நேராக அதைக் கொண்டுபோய்விடுகிறதை நாம் சரித்திரத்தில் பார்த்திருக்கிறோம். இஸ்ரவேலின் கதையும் அப்படிதான் இருந்தது. ஆகையால்தான், நான் யாக்கோபுடைய மேன்மையை வெறுக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இன்று நம் நாட்டில் நியாயம், நேர்மை போன்றவைகள் சீரழிந்துகொண்டே போகின்றன. இன்றைய அரசாங்கங்கள், ஊழல் என்பது அவசியமான ஒன்று என்பதுபோல செயல்படுகின்றன. பணம், ஆள்பலம், பதவி ஆகியவை மட்டுமே நாட்டுக்கும் தலைவர்களுக்கும் தேவை என்பது போல நடந்துகொள்ளுகின்றன. இந்நிலை மாற வேண்டும். தேர்தல்களில் நேர்மையான தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட ஜெபிப்போம்.

ஜெபம்

ஆண்டவரே, நேர்மையையும் நீதியையும் நிலைநாட்டக்கூடிய தலைவர்களை எங்களுக்குத் தாரும். ஆமென்.