காலைத் தியானம் – ஏப்ரல் 26, 2021

ஆமோஸ் 7: 1 – 6               

ஆண்டவரே, மன்னித்தருளும்; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்?                  

ஆமோஸைக் கர்த்தர், தம்முடைய வார்த்தைகளை இஸ்ரவேலரிடம் சொல்லும்படி அனுப்பினார். அதுதானே தீர்க்கதரிசியின் வேலை! ஆனால் கர்த்தருடைய வார்த்தைகளைச் சொல்லும்போது ஆமோசுக்கு யாக்கோபின் சந்ததியார்மீது மிகுந்த கவலையும், பரிதாபமும், கரிசனையும் ஏற்படுகிறது. தீர்க்கதரிசி ஜனங்களுக்காகப் பரிந்து பேசி அவர்களுக்காக ஜெபிக்கும் ஜெப வீரராக மாறுகிறார். நமக்கு அழிவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நம் நாட்டு மக்களைப் பார்க்கும்போது, அப்படிப்பட்ட கரிசனை உண்டா? அல்லது அவர்கள் செய்யும் பாவத்துக்கு சரியான தண்டனை என்று நினைத்துக் கொண்டு சும்மாயிருக்கிறாயா? நம் நாட்டு மக்களுக்காக ஜெபிப்பது நமது கடமை.

ஜெபம்

ஆண்டவரே, துணிகர பாவத்தில் வாழ்ந்து வருகிற அநேகரை நான் பார்க்கிறேன். என் நாட்டு மக்கள் மீது இரக்கமாயிரும். அவர்களில் யாரும் கெட்டுப் போகாதபடி அவர்களுக்கு உம்மை வெளிப்படுத்தும். ஆமென்.