ஆமோஸ் 8: 1 – 7
ஓய்வுநாளும் எப்போது முடியும் என்று சொல்லுகிறவர்களே
பிறரை ஏமாற்றி வியாபாரம் அல்லது தொழில் செய்வது அந்தக் காலத்து இஸ்ரவேலரிடம் மாத்திரமல்ல, இன்றைய தொழிலதிபர்களிடமும் தாராளமாய்க் காணப்படுகிறது. அதிகாரிகளிடத்தில் லஞ்சம் கொடுத்து, ஏழைகளை ஒடுக்கி, பொதுமக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதுதான் தொழில் என்பது போல நிலமை மோசமாகிவிட்டது. அலுவலகங்களில் வேலை செய்கிறவர்கள்கூட, இரவும் பகலும் வேலை செய்து எப்படி அதிகப் பணம் சம்பாதிப்பது என்பதில்தான் குறியாயிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் திருச்சபை சம்பந்தப்பட்ட எல்லா சடங்காச்சாரங்களிலும் பங்கு பெறுகிறார்கள். ஆனால் எப்பொழுது ஓய்வு நாள் முடியும் என்று காத்திருக்கிறார்கள்! அபோதுதானே பணம் சேர்க்கும் ஓட்டத்தில் இன்னும் அதிக தூரம் ஓடமுடியும்!! சரி, மற்றவர்களைப் பற்றி பேசுவது இருக்கட்டும். நீ ஓய்வு நாளை எப்படி உபயோகிக்கிறாய்? வாரத்தில் ஒரு நாளாவது ஓய்ந்திருக்கவும், ஆண்டவரோடு உறவாடவும் மட்டும் ஒதுக்கி வைத்திருக்கிறாயா?
ஜெபம்
ஆண்டவரே, ஓய்வு நாளில் இவ்வுலக வேலைகளிலிருந்து விலகியிருக்க உதவி செய்யும். ஆமென்.