காலைத் தியானம் – ஏப்ரல் 29, 2021

ஆமோஸ் 8: 8 – 14              

கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன்                

கர்த்தருடைய வார்த்தையை ஆமோஸ் தீர்க்கதரிசி இஸ்ரவேலரிடம் கொண்டுசென்றபோது அதைக் கேட்க வேண்டுமென்ற ஆவலும் தாகமும் அவர்களிடம் காணப்படவில்லை. ஆகையால் அவர்களிடமிருந்து கர்த்தருடைய வார்த்தையைக் கேட்கக் கூடிய தருணம் கூட விலக்கிக் கொள்ளப்படும் என்று கர்த்தர் சொன்னார். இன்றும் நம்முடைய எல்லா சூழ்நிலைகளிலும் நம்மை வழிநடத்தும்படி கர்த்தருடைய வார்த்தை (வேதாகமம்) நம் கையில் இருக்கிறது. அதை விட்டுவிட்டு, வாழ்க்கையின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஜோசியர்களையும், புனித ஸ்தலங்களையும் மற்ற மனிதரையும் தேடி ஓடும் மக்கள் கூட்டம்தான் எத்தனை பெரியது! கர்த்தரையும் வேதாகமத்தையும் அறியாத உன் நண்பர்கள் பலவிதமான கேள்விகளுடன் உன்னிடம் வரும்போது, வேதாகமத்தின் மூலம் அவர்களை வழிநடத்து. அவர்களும் ஆண்டவரைப் பிடித்துக் கொள்வார்கள்.

ஜெபம்

ஆண்டவரே, குறைவில்லாமல், தடையில்லாமல் எங்களுக்குக் கிடைத்துள்ள உம்முடைய வார்த்தைக்காக நன்றி சுவாமி. ஆமென்.