காலைத் தியானம் – ஏப்ரல் 30, 2021

ஆமோஸ் 9:1 – 15              

ஆகிலும் யாக்கோபின் வம்சத்தை முழுவதும் அழிக்கமாட்டேன்                

ஆமோஸ் தீர்க்கதரிசியின் புத்தகத்தில் முதல் அதிகாரத்திலும் இரண்டாம் அதிகாரத்தின் ஒரு சில வசனங்களிலும் புறஜாதியாருக்கு அல்லது வேறு தேசத்தாருக்கு வரப்போகும் அழிவைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்பது அதிகாரங்கள் அடங்கிய இப்புத்தகத்தில் ஏழு அதிகாரங்களில் (2 முதல் 8 வரை) யூதாவுக்கும் குறிப்பாக இஸ்ரவேலருக்கும் வரப்போகும் அழிவைக் குறித்தே சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வளவு வேதனைப் பட்ட கர்த்தர் அழிவு என்ற வார்த்தையில் அவர் செய்தியை முடிக்கவில்லை. நம்முடைய மீட்புதான் அவருக்கு முக்கியம். அழிவு என்பது நாமே நமக்குத் தேடிக் கொள்ளுவது. கர்த்தர் நமக்குக் கிருபையாகக் கொடுத்துள்ள இந்நாட்களில், நமக்கும் நம்மைச் சூழ்ந்திருப்பவர்களுக்கும் பாவத்திலிருந்து விடுதலை கிடைக்கவும், ஆண்டவருடைய உறவு கிடைக்கவும் செயல்படுவோமாக.

ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய அன்பு மாத்திரம் எனக்குப் போதும். என்னையும் என்னைச் சுற்றியிருப்பவர்களையும் இரட்சித்துக் காத்துக் கொள்ளும். ஆமென்.