யோபு 34: 10 – 15
அநீதி சர்வவல்லவருக்குத் தூரமாயிருக்கிறது
தேவன் தனக்கு நியாயம் செய்யவில்லை என்று யோபு சொன்னதற்கு எலிகூவின் முதல் பதில் இதுதான். நீதியும் நியாயமும் தேவனிடத்தில் இல்லை என்றால் அவர் தேவனே அல்ல! நீதியும் நியாயமும் அவருடைய குணாதிசயங்கள். நீதியும் நேர்மையும் இல்லாத மனிதன் அமைச்சராகலாம், முதலமைச்சராகலாம், பிரதம மந்திரியாகலாம், ஏன், நீதிமன்றத்தின் நியாயாதிபதியாகக் கூட ஆகலாம். ஆனால் தேவன் நீதியும் நியாயமும் இல்லாதவர் அல்ல. மேலும் தேவனைக் கேள்வி கேட்கிறதற்கு மனிதனுக்கு என்ன உரிமை? பூமியில் இத்தனைக் காரியங்களைச் சாதித்துவிட்டதால் எல்லாம் என் கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கிறது என்று நினைக்கும் மனிதனுக்கு கொரோனா ஒரு எச்சரிக்கை! மனிதனுடைய ஆவியும் சுவாசமும் கர்த்தருடைய கையில் இருக்கின்றன. அவற்றை அவர் இழுத்துக்கொண்டால், இந்த உடல் பூமிக்குப் புழுதியாய்த் திரும்பிவிடும் அல்லவா? ஆண்டவரின் நியாயத்தைக் குறித்துக் கேள்வி கேட்க நமக்கு ஒரு தகுதியும் இல்லை.
ஜெபம்
ஆண்டவரே, உம்முடைய நியாயத்தைக் குறித்து கேள்வி கேட்காத மன நிலையை எனக்குத் தாரும். ஆமென்.