காலைத் தியானம் – மே 04, 2021

யோபு 34: 16 – 20                 

நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆளக்கூடுமோ?               

பூமியில் தற்காலிகமாக அரசாட்சி செய்யும் அமைச்சர், முதலமைச்சர், பிரதம மந்திரி, ஜனாதிபதி அல்லது அரசன் ஆகியோரிடம் நாம் நீதியையும் நியாயத்தையும் எதிர்பார்க்கிறோம் அல்லவா?  கர்த்தரை அறியாதவர்களும், கடவுளே இல்லை என்று சொல்பவர்களும் கூட இப்படிப்பட்ட எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்களே, இந்த எதிர்பார்ப்பு எந்த அடிப்படையில் மனிதனுக்கு வந்தது? கர்த்தருடைய சாயலில் உருவாக்கப்பட்ட மனிதனின் உள்ளத்தில் கர்த்தர் வைத்துள்ள துடிப்பு (intrinsic vaue) அவனை நீதிக்காகவும் நியாயத்துக்காகவும் ஏங்க வைக்கிறது. தன்னலம் என்ற, இனிமையாகத் தோன்றும் பழத்தைக் காட்டி சாத்தான் மனிதனை நீதியிலும் நியாயத்திலுமிருந்து கீழே தள்ளிவிடுகிறான். உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளில் நீதியையும் நியாயத்தையும் எப்பொழுதும் கடைப்பிடி.

ஜெபம்

ஆண்டவரே, உலகம் போகிற போக்கிலே நான் போய்விடாதபடி, நியாயத்திலும் நீதியிலும் நிலைத்திருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.