காலைத் தியானம் – மே 05, 2021

யோபு 34: 21 – 30                 

அவர் அவன்மேல் மிஞ்சினதொன்றையும் சுமத்தமாட்டார்               

வியாதி, வறுமை, மரணம், இயேசுவைப் பின்பற்றுவதால் துன்பங்களை அனுபவிப்பது போன்றவைகளை யாரும் விரும்பி வரவேற்பதில்லை. ஆனால் ஆதாம் ஏவாள் முதற்கொண்டு மனிதகுலம் அனைத்தும் பாவத்திற்குள் விழுந்துவிட்ட நிலையில் இப்படிப்பட்ட துன்பங்களை நாம் யாருமே தவிர்க்க முடியாது. ஒருவேளை இந்நாட்களில் நீ கடினமான துன்பங்களை அனுபவித்து வந்தால், உன் துன்பங்கள் இயேசுவுக்கு தெரியும் என்பதை நினைவுபடுத்திக் கொள்.  இப்போது உனக்குத் தெரியாவிட்டாலும், ஆண்டவர் இந்த துன்பத்தை உன் வாழ்க்கையில் அனுமதித்திருப்பதற்கு ஒரு காரணம் இருக்கும் என்பதையும் உணர்ந்துகொள். மேலும் கர்த்தர் உனக்கு மிஞ்சினதொன்றையும் உன்மேல் சுமத்தமாட்டார் என்பதையும் விசுவாசி.  பவுல் அப்போஸ்தலன் சொல்வது போல, நீ எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை (2 கொரி 4: 8, 9).

ஜெபம்

ஆண்டவரே, ஒருபோதும் என்னைக் கைவிடாத நீர் என்னருகில் இருப்பதால் நான் பயப்படவேண்டியதில்லை என்பதை நினைவுபடுத்தியதற்காக நன்றி சுவாமி. ஆமென்.