காலைத் தியானம் – மே 07, 2021

யோபு 35: 1 – 12                 

நீர் பாவஞ்செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்?               

நான் தேவன் மேல் பிரியம் வைத்து, பாவம் செய்யாமல் வாழ்கிறதினாலே எனக்கு என்ன பிரயோஜனம் என்று யோபு சொன்னதாக எலிகூ குறிப்பிட்டிருந்தான். எலிகூ இப்போது அதற்கு எதிரான ஒரு கேள்வியை வைக்கிறான். நான் பாவமில்லாத வாழ்க்கை வாழ்வதால் எனக்கென்ன லாபம் என்று கேட்கிறாயே, நீ பாவம் செய்தால் அதினால் உன் ஆண்டவருக்கு என்ன நஷ்டம்? நம்முடைய வாழ்க்கையின் விளைவுகளை சந்திப்பது கர்த்தர் அல்ல, நாமும் நம்மைச் சார்ந்தவர்களும்தான். நீ பாவம் செய்தால் அதின் விளைவுகளை நீயும், உன் சந்ததியாரும், உன்னைச் சார்ந்தவர்களும் சந்திக்க நேரிடும். நீ நீதிமானாயிருந்தால் அதின் பலனை நீயும், உன்னைச் சார்ந்தவர்களும் மாத்திரமல்ல, உன்னைச் சுற்றியிருக்கும் பல மனிதரும் பெறுவார்கள். இது உண்மையென்றாலும், உன் பாவம் உன் ஆண்டவரைத் துக்கப்படுத்துகிறது. உன் நீதியுள்ள வாழ்க்கை அவரை மகிழ்விக்கிறது.

ஜெபம்

ஆண்டவரே, உம்மைத் துக்கப்படுத்தும் யாதொன்றையும் நான் செய்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.