யோபு 35: 13- 16
அறிவில்லாமல் வார்த்தைகளை மிகுதியாய் வசனிக்கிறார்
நாம் நம்முடைய இருதயத்தைத் திறந்து கர்த்தரிடத்தில் நம் துயரங்களைக் கொட்டுவதற்கும், அர்த்தமில்லாமல் அநேக வார்த்தைகளைப் பேசுவதற்கும் வித்தியாசம் உண்டு. சாமுவேலின் தாயாகிய அன்னாள், ஏலி பார்த்துக் கொண்டிருக்கும்போது கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் தன் இருதயத்தின் துயரங்களைக் கொட்டினாள். ஏலி அவள் குடித்து வெறித்திருந்ததாக நினைத்தான். ஆனால் அன்னாளுடைய ஜெபம் கேட்கப்பட்டது. அதே சமயம் மத்தேயு 6:7ல், இயேசு கிறிஸ்து, நீங்கள் ஜெபம்பண்ணும்போது அஞ்ஞானிகளைப் போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என்று சொல்லுகிறார். மேலும், கர்த்தரிடத்தில் நம் இருதயத்தின் ஆழத்திலுள்ள கேள்விகளைக் கேட்பதற்கும், கர்த்தரைக் கேள்வி கேட்பதற்கும் வித்தியாசம் உண்டு. கர்த்தர் உன் இருதயத்தைப் பார்க்கிறவர். உன் வார்த்தைகளை மாத்திரம் கேட்கிறவர் அல்ல.
ஜெபம்
ஆண்டவரே, என் இருதயத்தின் எண்ணங்கள் உமக்குப் பிரியமானவைகளாக இருப்பதாக. ஆமென்.