யோபு 36: 1 – 4
உம்மோடே பேசுகிறவன் அறிவில் தேறினவன்
எலிகூ பேச்சில் தேவனைக் குறித்த பல உண்மைகள் இருந்தன. அதே சமயம் அவன் யோபுவைக் குறித்து சொன்னவைகளில் பல தவறுகள் இருந்தன. நம்முடைய சொந்த அறிவை நம்பி யாரையும் குற்றப்படுத்திவிடக் கூடாது என்பதற்கு எலிகூவின் பேச்சு ஒரு உதாரணம். மேலும் எலிகூவிடம் அடக்கமும் மனத்தாழ்மையும் இல்லை. அவனுடைய நீண்ட சொற்பொழிவு யோபு மற்றும் அவனோடு இருந்தவர்களின் பொறுமையைச் சோதித்திருக்கவேண்டும். ஆகையால்தான் எலிகூ, நான் பேசி முடியுமட்டும் சற்றே பொறும் என்று இரண்டாம் வசனத்தில் சொல்லுகிறான். மேலும் தன்னைத் தானே அறிவில் தேறினவன் என்று சொல்லிக் கொள்ளுகிறான். எலிகூவின் தற்பெருமை உன்னை நெருங்கிவிடாதபடி உன்னைக் காத்துக்கொள்.
ஜெபம்
ஆண்டவரே, தற்பெருமை என்னை நெருங்கவிடாமல் என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.