யோபு 36: 16 – 21
அக்கிரமத்துக்குத் திரும்பாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்
எலிகூ மூன்று ஆலோசனைகளை யோபுவுக்குச் சொல்லுகிறான். உம்முடைய துன்பத்தின் நாட்களில், மீட்கும் பொருளை அதிகமாய்க் கொடுத்துத் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கவேண்டாம். உம்முடைய செல்வத்தையும் பொன்னையும் கர்த்தர் மதிக்கிறதில்லை. இரண்டாவதாக உம்முடைய இடத்தைவிட்டு வாரிக்கொள்ளப்படுவதை விரும்பவேண்டாம். அதாவது, நான் உயிரோடில்லாமல் மரித்துப் போவதே மேல் என்று நினைக்கிற தற்கொலை எண்ணங்கள் உமக்கு வரவேண்டாம். மூன்றாவதாக, பாவ வாழ்க்கைக்குத் திரும்பவேண்டாம். இந்த ஆலோசனைகள் யோபுவுக்குத் தேவையாயிருந்தனவா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் நமக்குத் தேவை. குறிப்பாக வறுமையோ, வியாதியோ, மன அழுத்தமோ நம்மை விரக்தியின் எல்லைக்குக் கொண்டு போகும்போது, இந்த மூன்று ஆலோசனைகளையும் மனதில் வைத்துக் கொண்டு, உன் ஆண்டவரை மாத்திரம் பிடித்துக் கொள். அவர் உன்னை உன் துன்பங்களிலிருந்து மீட்டு உயர்த்துவார்.
ஜெபம்
ஆண்டவரே, என் பாவ வாழ்க்கைக்குத் திரும்பிவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.