காலைத் தியானம் – மே 12, 2021

யோபு 36: 22 – 33                 

நாம் அவரை அறிய முடியாது                 

கர்த்தரை அறிந்துகொள்ளவே முடியாதா? கர்த்தருடைய கரத்தின் கிரியைகளை நாம் அனுதினமும் பார்க்கிறோம். ஆகையால் அவருடைய ஞானத்தின் விளிம்பை நாம் உணர முடிகிறது.  We can sense the edge of His wisdom. கர்த்தர் நம் முன்னோர்களுக்குச் செய்த திரளான அற்புதங்களையும் அடையாளங்களையும் குறித்து வாசிக்கிறோம் அல்லது கேள்விப்படுகிறோம். மேலும் கர்த்தர் செய்யும் அற்புதங்களை நாமும் அனுபவிக்கிறோம். ஆகையால் அவருடைய வல்லமையின் விளிம்பை நாம் அனுபவிக்க முடிகிறது. We can experience the edge of His power. கர்த்தர் யார் என்பதைக் குறித்தும் அவருடைய குணாதிசயங்களைப் பற்றியும் பரிசுத்த வேதாகமத்திலே வாசிக்கிறோம். ஆகையால் அவருடைய மனதின் விளிம்பை நாம் எட்டிப்பார்க்க முடிகிறது. Yes, we can peep at the edge of His mind. ஆனால், கர்த்தரை முழுமையாகத் தெரிந்துகொண்ட மனிதன் ஒருவனுமில்லை.  அப்படிப்பட்ட கர்த்தர் உனக்கும் எனக்கும் தகப்பனாக, நண்பனாகக் கிடைத்திருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்!

ஜெபம்

ஆண்டவரே, உம்மைப் பற்றி நான் தெரிந்து, உணர்ந்து, அனுபவித்துக் கொண்ட ஒரு சில காரியங்களே என்னைப் பிரம்மிக்க வைக்கின்றன. உம்மை அப்பா என்று அழைக்க நீர் கொடுத்திருக்கும் உரிமைக்காக நன்றி சுவாமி. ஆமென்.