யோபு 37:1 – 24
அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்
கர்த்தருடைய வல்லமையைக் குறித்து எலிகூ சொன்னதை இந்த அதிகாரத்தில் பார்க்கிறோம். ஒவ்வொரு வருடமும் மாறி மாறி வரும் கோடைக் காலம், மழைக் காலம், குளிர் காலம், வசந்த காலம் போன்ற காலங்களை இயற்கை என்று எளிதாகச் சொல்லிவிடுகிறோம். அந்த ஒழுங்கு மறையை ஏற்படுத்தி காலங்களை தப்பாமல் மாறி மாறி வரச்செய்வது யார்? மனிதனுடைய தவறான வாழ்க்கை முறை இயற்கையில் ஒருசில மாற்றங்களை (global warming) ஏற்படுத்தினாலும் மனிதனால் காலங்களை மாற்ற முடியாது. அல்லது காலங்களை உருவாக்கமுடியாது. மேகம், மழை, மின்னல், இடி, கல்மழை, உறைந்த மழை, குளிர், காற்று, வெயில், ஆகாயமண்டலம் போன்றவைகளைக் குறித்து மனிதன் எவ்வளவு அறிந்திருந்தாலும், அவனால் அவற்றை உருவாக்கவோ அல்லது உருவாக்கினவரின் வல்லமையைப் புரிந்துகொள்ளவோ முடியாது. அவைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர் கர்த்தர் ஒருவரே. அப்படிப்பட்ட கர்த்தருக்குமுன் நாம் பயபக்தியுடன் வாழக் கற்றுக் கொள்ளுவோமாக!
ஜெபம்
ஆண்டவரே, உம்மைக் குறித்த பயபக்தி என்னிடமும் என் குடும்பத்தினரிடமும் எப்போதும் நிலைத்திருப்பதாக. ஆமென்.