காலைத் தியானம் – மே 15, 2021

யோபு 39: 1 – 30                

காண்டாமிருகம் உன்னிடத்தில் சேவிக்கச் சம்மதிக்குமோ?                 

இந்த அதிகாரத்தில் கர்த்தர் அநேக மிருகங்களையும் பறவைகளையும் விவரித்து, அவைகளைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? நான் எப்படி அவைகளைப் பலுகிப் பெருகப் பண்ணுகிறேன் என்பது உனக்குத் தெரியுமா என்று கேட்கிறார்? உனக்கு அவைகளைப் போஷிக்க முடியுமா?  இந்த அதிகாரத்தின் மையக் கருத்து, “என் படைப்பின் ஒரு பகுதியைக் கூட உன்னால் பராமரிக்க முடியுமா?” என்பது.  Can you oversee My creation? ஆடுகளையும் மாடுகளையும் நீ அடக்கி வளர்த்து உபயோகிக்கும் மிருகங்களாக்கிக் கொண்டாய். ஆனால் காண்டாமிருகத்தை உன்னால் என்ன செய்ய முடியும்? காட்டு மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் உன்னால் உணவு உருவாக்கிக் கொடுக்க முடியுமா? இப்படிப்பட்ட மிருகங்களையும் பறவைகளையுமே பராமரித்து காப்பாற்ற முடியாத நீ என்னிடம் நியாயம் குறித்து பேச விரும்புகிறாயோ என்று கர்த்தர் கேட்டார்.

ஜெபம்

ஆண்டவரே, யோபுவைப் போல நானும் அறியாமையால் பேசிய தருணங்கள் உண்டு. என்னை மன்னியும். தயவுசெய்து மன்னியும். ஆமென்.