யோபு 40: 6 – 41: 34
பிகமோத்தை நீ கவனித்துப் பார்
பிகமோத் என்பது நீர்யானையைக் குறிக்கிறது என்று வேத ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். இந்த ஒரு மிருகத்தை உன்னால் அடக்க முடியுமா? நீ நினைக்கிறபடி அதைச் செயல்பட வைக்கமுடியுமா என்று கர்த்தர் கேட்கிறார். உன்னை நீதிமானாகக் காட்டும்படி என் நியாயத்தைக் கேள்வி கேட்கிறாயே, இவ்வுலகிலுள்ள பெருமையுள்ளவர்களையெல்லாம் உன்னால் பணிய வைக்கமுடியுமா? துன்மார்க்கரைப் புழுதியிலே புதைத்து அவர்களை ஒடுக்கமுடியுமா? 41ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் லிவியாதான் என்பது ஒரு பயங்கரமான கடல் பிராணி (monster, dragon) என்று சொல்லப்படுகிறது. இந்த வசனங்களின் மையக் கருத்து, ”என்னுடைய படைப்பனைத்தையும் உன்னால் அடக்க முடியுமா?” என்பது. Can you subdue My creation? கர்த்தர் யோபுவின் கேள்விகளுக்கு விளக்கம் தரவில்லை. அவர் தம்மைத் தாமே யோபுவுக்கு வெளிப்படுத்தினார்.
ஜெபம்
ஆண்டவரே, உம்முடைய மகத்துவத்தை அறிந்துகொள்ளும் அறிவில் அனுதினமும் வளர எனக்குக் கிருபை தாரும். ஆமென்.