யோபு 42: 1 – 17
யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது…
தன்னுடைய காதுகளால் கர்த்தரைக் குறித்து கேட்டு அறிந்திருந்த யோபு இப்போது அவரைக் கண்களால் கண்டுவிட்டான். உனக்கும் உன் ஆண்டவரோடு எப்பொழுதும் பேசிக்கொண்டேயிருக்கும் உறவு இருந்தால் மாத்திரம்தான் அவரைக் கண்டுகொள்ள முடியும். இல்லாவிட்டால் உன் அறிவு இயேசுவைப் பற்றிய, புத்தகத்தில் படிக்கும் அறிவாக மாத்திரமே இருக்கும். இரண்டாவதாக, யோபு கர்த்தரிடம் மன்னிப்பு கேட்ட பின்னரே அவர் அவனைத் தன்னுடைய தாசன் என்று கூறுகிறார். தாசன் என்பதற்கு ஊழியக்காரன் என்று அர்த்தம். யோபு கர்த்தருக்கு என்ன ஊழியம் செய்தான்? சொல்லமுடியாத உபத்திரவங்களின் மத்தியிலும், கர்த்தரைச் சபிக்காமல், அமைதியாய் துன்பங்களைச் சகித்துக் கொண்டதின் மூலமாக யோபு சாத்தானுக்குத் தோல்வியைக் கொடுத்தான். அதுவே யோபு செய்த ஊழியம். மூன்றாவதாக, யோபு எப்போது தன் மூன்று நண்பர்களின் கொடுமையான வார்த்தைகளை மன்னித்து அவர்களுக்காக ஜெபம் செய்தானோ, அப்போது கர்த்தர் அவனுடைய சிறையிருப்பை மாற்றி, இரண்டத்தனையான ஆசீர்வாதங்களைக் கொடுத்தார். நீ யாரையாவது மன்னிக்க வேண்டுமா?
ஜெபம்
ஆண்டவரே, யோபுவின் சரித்திரத்தின் மூலமாக எனக்கு நீர் சொல்லிக் கொடுத்துள்ள ஏராளமான பாடங்களுக்காக நன்றி சுவாமி. ஆமென்.