காலைத் தியானம் – மே 19, 2021

ஒபதியா 1 – 4 

நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும்            

இன்று விண்வெளியில் மனிதன் தன் கூட்டைக் கட்டிவிட்டான்.  பல மாதங்கள், ஏன் வருடங்கள் கூட விண்வெளியில் தங்கியிருந்து விஞ்ஞான ஆய்வுகள் நடத்தும் அளவுக்கு மனிதனின் அறிவு முன்னேறிவிட்டது. வேறே எந்த கிரகத்தில் மனிதன் வாழ  முடியும் என்று இப்போது ஆராய்ந்து கொண்டிருக்கிறான். நம்முடைய அறிவின் வளர்ச்சி நம்மை நம் ஆண்டவரிடமிருந்து பிரித்துவிடக் கூடாது. ஏதோமியரிடம் காணப்பட்ட அகந்தையும் மெத்தனமும் நம்மிடம் வந்துவிடக் கூடாது. பழைய ஏற்பாட்டிலே, ஒரு அதிகாரம் மாத்திரம் கொண்ட புத்தகம் ஒபதியாவின் புத்தகம்தான். இதில் கர்த்தரிடமிருந்து ஏதோமியருக்கு வந்த எச்சரிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த எச்சரிப்பின் ஒவ்வொரு வார்த்தையும் இன்றும் நமக்குப் பொருந்தும்.

ஜெபம்

ஆண்டவரே, என் அறிவும் ஞானமும் நீர் எனக்குக் கொடுத்துள்ள பிச்சை. அவை என்னிடத்தில் பெருமையை உண்டாக்கிவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.