காலைத் தியானம் – மே 21, 2021

ஒபதியா 9 – 11 

நீயும் அவர்களில் ஒருவனைப் போல் இருந்தாய்            

ஏற்கனவே பிறர் மூலமாகத் துன்பத்தில் இருக்கும் இஸ்ரவேலருக்குப் பாதுகாப்பாக இருக்கவேண்டிய சகோதரர்கள், அவர்களைத் தாக்கினார்கள். அவர்களும் எதிரிகள் அணியில் உள்ளவர்கள் போல செயல்பட்டார்கள். ஏதோமியரில் வேறு சிலரோ இஸ்ரவேலர் கைப்பற்றப்பட்டு கொல்லப்பட்டால் நமக்கென்ன என்று அலட்சியமாக இருந்தனர். You stood aloof என்று ஆங்கில மொழிபெயர்ப்பு (NIV) சொல்லுகிறது. உன்னைச் சுற்றியிருக்கும் எல்லா மனிதரும் உன்னைப் போலவே கர்த்தரால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை உணருகிறாயா? உணர்ந்தால் அவர்கள் துன்பப்படும்போது எப்படி உன்னால் எதுவும் நடக்காதது போல சும்மாயிருக்கமுடியும்?

ஜெபம்

ஆண்டவரே, பிறர் துன்பப்படும்போது அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்படி என்னை உபயோகியும். ஆமென்.