ஒபதியா 16 – 21
யாக்கோபு வம்சத்தார் . . . ஏசா வம்சத்தார்
யாக்கோபின் வம்சத்தார் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். ஏசாவின் வம்சத்திலோ சாபம் தொடருகிறது. உனக்கு முன்னுள்ள தலைமுறைகளில் எத்தனை தலைமுறைகளை உனக்குத் தெரியும்? உனக்குப் பின்னுள்ள தலைமுறைகளில் எத்தனை தலைமுறைகளை உனக்குத் தெரியும்? ஆண்டவருக்குச் சித்தமானால், அடுத்த நூறு ஆண்டுகளில் உனக்குப் பின் வரும் உன் சந்ததியார் எத்தனை பேர் இருப்பார்கள் என்று நினைத்ததுண்டா? அவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்து நினைத்ததுண்டா? நீ இன்று வாழும் விதம் உனக்குப் பின் வரும் சந்ததியார் பெறப்போகும் ஆசீர்வாதத்தை அல்லது சாபத்தை நிர்ணயிக்கக் கூடும். கவனமாயிரு.
ஜெபம்
ஆண்டவரே, என் குடும்பத்திலுள்ள சிறு பிள்ளைகளையும் அவர்களுக்குப் பின்வரும் சந்ததியாரையும் உம்முடைய இரத்தக் கோட்டைக்குள் வைத்து காத்துக் கொள்ளும். ஆமென்.