காலைத் தியானம் – மே 24, 2021

யோனா 1: 1 – 2    

அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது

ஆண்டவருடைய கண்களுக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்டது எதுவுமில்லை. யாராவது, நாம் அவரிடம் எடுத்துச் செல்வது மாத்திரம்தான் அவருக்குத் தெரியும் என்று நினைத்தால் நாம் அவரையும் மனிதனைப் போல பார்க்கிறோம் என்று தான் அர்த்தம். நினிவே மக்களின் அக்கிரமம் ஆண்டவருடைய சமுகத்தில் அவர்முன்  நின்றது. ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தது, ஆண்டவருடைய சமுகத்தில் அவர்முன்  நின்றது. காயீன் ஆபேலைக் கொன்ற போது, ஆபேலின் இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டது என்று கர்த்தர் சொன்னார் (ஆதி 4:10). சாத்தான் யோபின் மீது தன் பார்வையைத் திருப்பியதைக் கூட ஆண்டவர் அறிந்திருந்தார். என் தாசனாகிய யோபின் மேல் கவனம் வைத்தாயோ என்று கர்த்தர் சாத்தானிடம் கேட்டார் (யோபு 1:8). நாம் செய்யும் அல்லது நினைக்கும் நன்மைகள் தீமைகள் அனைத்தையும் கர்த்தர் அறிந்திருக்கிறார். அவரை வேதனைப்படுத்தாதே.

ஜெபம்

ஆண்டவரே, நீர் வேதனைப்படும்படி நான் நடந்துகொள்ளாதபடி என் சிந்தனைகளையும் செயல்களையும் சீர்ப்படுத்தும். ஆமென்.