யோனா 1: 3 – 5
கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி
கர்த்தருக்கு மறைவானது ஒன்றுமில்லை என்பதை நேற்று தியானித்தோம். அதுதான் எனக்குத் தெரியுமே, அதில் எனக்கு எந்தவித சந்தேகமும் கிடையாதே என்று நினைக்கிறாயா? யோனாவைப் பாருங்கள். அவன் கர்த்தருடைய மனிதன். அவருடைய தீர்க்கதரிசி. கர்த்தரோடு நேராகப் பேசிக் கொண்டிருந்தவன். நமக்குக் கிடைக்காத பாக்கியத்தைப் பெற்றிருந்தவன். கர்த்தர் நினிவேக்குப் போகச் சொன்னது பிடிக்கவில்லையென்றால், தான் இருந்த இடத்திலேயே இருந்திருக்கலாம் அல்லவா? ஏன் தர்ஷீசுக்கு ஓட வேண்டும்? கர்த்தருடைய சமூகத்தைவிட்டு ஓடினானாம்! சரி, இப்போது யோனாவை ஒரு நிமிடம் விட்டுவிட்டு, நம்மைப் பற்றி யோசிப்போம். ஒரு நாளின் ஒவ்வொரு வினாடியும் நாம் செய்யும் மற்றும் சிந்திக்கும் காரியங்கள் அனைத்தும் கர்த்தர் முன் நிற்கின்றன என்ற புரிதல் இருந்தால் அவைகளை நாம் செய்வோமா?
ஜெபம்
ஆண்டவரே, நான் எப்பொழுதும் உமக்கு முன்பாக நிற்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தும். ஆமென்.