காலைத் தியானம் – மே 26, 2021

யோனா 1: 6 – 12    

என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு வந்ததென்பதை நான் அறிவேன்

கர்த்தரைவிட்டு ஓடி ஒளிய முயன்றவனுக்கு இது எப்படி தெரியும்? கடல் கொந்தளிப்பு அதற்கு முன் நடந்ததேயில்லையோ? கப்பலில் பயணம் செய்தவர்கள் அனைவரும் கர்த்தரை அறிந்தவர்கள் அல்ல. யோனா தன்னைப் பற்றி சொன்னவுடன் அவர்கள் யோனாவைத் தூக்கி கடலில் போட்டிருந்தால் அதை நாம் புரிந்துகொள்வது எளிதாயிருந்திருக்கும்.  ஆனால் இங்கு யோனாவே கடல் கொந்தளிப்புக்குக் காரணம் சொல்லி, தன்னைக் கடலில் தூக்கிப் போடும்படி சொல்லுகிறான். கர்த்தரை விட்டு விலகி ஓட முயன்ற யோனாவுக்குக் கர்த்தருடைய மனம் நன்றாகத் தெரியும். நமக்கும் கர்த்தர் ஒரு உள்மனதைக் கொடுத்திருக்கிறார். நாம் செய்வதில் எது கர்த்தருக்குப் பிடிக்கும், எது பிடிக்காது என்பதும், நம்முடைய செயல்களின் விளைவுகளும் நம் உள்மனதுக்கு நன்றாகவே தெரியும்.

ஜெபம்

ஆண்டவரே, என் உள்மனதின் மூலமாக நீர் என்னுடன் பேசுவதைக் கேட்கும்படி என் இருதயத்தை மென்மையாக்கும். ஆமென்.